Used Cars: பழைய கார் வாங்கவும் கடன் கிடைக்கும், முழு விவரம் இதோ

Used car loan: பயன்படுத்திய கார்களுக்கு வழங்கப்படும் கடனின் உதவியுடன், நீங்கள் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம். பயன்படுத்திய கார் கடன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. அதை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்துதலாம். பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFCகள் பயன்படுத்திய கார்களுக்கான கடன்களை வழங்குகின்றன. புதிய காருக்கு வாங்கும் வாகனக் கடனை விட, இந்தக் கடனுக்குக் கொஞ்சம் கூடுதல் வட்டி கட்ட வேண்டும். 

1 /5

நீங்கள் சம்பளம் வாங்குபவர் என்றால் உங்கள் வயது 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவராக இருந்தால் 25 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். உங்கள் மாத வருமானம் ரூ. 15,000 இருந்தால், நீங்கள் பயன்படுத்திய கார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போதைய நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருடமாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.

2 /5

தற்போது, ​​நீங்கள் பயன்படுத்திய கார் கடனுக்கு 9.25 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. சில வங்கிகள் அல்லது NBFCகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழைய கார்களுக்கு கடன் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

3 /5

சில வங்கிகள் பயன்படுத்திய காரின் மொத்த விலைக்கு இணையான கார் கடனையும் வழங்குகின்றன. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சிறந்த விருப்பங்களைப் பெறுவீர்கள். பயன்படுத்திய கார் கடனுக்கு விண்ணப்பிப்பது எளிது. நீங்கள் இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம், கிளைக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

4 /5

பயன்படுத்திய கார் கடனில், கடன் தொகையில் காப்பீட்டு செலவு சேர்க்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயன்படுத்தப்பட்ட காரை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாங்கவும்.

5 /5

பயன்படுத்திய கார் கடனுக்கு விண்ணப்பப் படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கார் மதிப்பீட்டு அறிக்கை, அடையாளச் சான்று, வருமானச் சான்று போன்ற ஆவணங்கள் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முன் இந்த ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.