Chilli Health Benefits: மிளகாய் உணற்கு கார சுவையை கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய சமையலில் மிளகாய் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் உள்ள லுடீன் சத்து பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
கார சுவை நிறைந்த மிளகாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மிளகாய் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. இந்த கட்டுரையில் மிளகாயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் (Health Benefits Of Chilli) நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
லுடீன் ஊட்டசத்து நன்மைகள்: லுடீன் என்பது ஒரு வகை ஃபிளாவனாய்டு. ஒரு வகையான பைட்டோகெமிக்கல் ஆன இது தாவரங்களில் மட்டுமே காணப்படுகிறது. அதில் ஒன்று மிள்காய். மிளகாயில் லுடீன் மட்டுமல்லாது, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்பு சத்து, பொட்டாசியம், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட், பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.
இளமை: லுடீன் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இது தீவிர நோய்களுக்கு எதிராக போராடுவதுடன் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
உடல் பருமன்: பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதுடம், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும் மேலும் அதிக கலோரிகளை எரித்து உடல் எடையைக் (Weight Loss Tips) குறைக்க பெரிதும் உதவும்.
மன அழுத்தம்: அன்றாட டென்ஷன் மற்றும் மன அழுத்தம் விலக மிளகாய் உதவும் லுடீன் ஊட்டசத்து மன அழுத்தத்தைக் குறைக்கவும் மன அமைதியை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
இரத்த சர்க்கரை நோய்: நீரிழிவு நோயாளிகள் மிளகாயை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை ளஅளவை கட்டுப்படுத்தலாம். மிளகாயில் உள்ள கேப்சைசின் என்கிற கலவை நீரிழிவை எதிர்த்து போராட உதவும்.
இதய ஆரோக்கியம்: லுடீன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட மிளகாய் மாரடைப்பு, இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: தாவர உணவுகளில் காணப்படும் லுடீன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அந்த வகையில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு எதிராக செயல்படுகிறது மற்றும் இந்த தீவிர நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்: லுடீன் அடிப்படையிலான உணவுகள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். எனவே, மிளகாய் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.