2ஜி நெட்வொர்க்கை ஒழிக்க ஜியோ போட்ட மாஸ் பிளான்..! 4ஜி நெட்வொர்க்கில் புதுபோன் - விலை?

Jio Feature Phone: இந்தியாவில் 2ஜி நொட்வொர்க்கு முக்தி கொடுக்கும் விதமாக 4ஜி நெட்வொர்க்கில் யுபிஐ பணப்பரிவர்த்தனை வசதியுடன் புதுபோனை அறிமுகப்படுத்துகிறது ஜியோ. 

 

1 /6

ஜியோ நிறுவனத்தைப் பொறுத்தவரையில் பிஸ்னஸ் என்று வந்துவிட்டால் பாரபட்சமே இல்லாமல் புது பிளானை அறிமுகப்படுத்துவதில் கில்லாடி. ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்கு ஈடுகொடுப்பதற்கே திண்டாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  

2 /6

அந்தவகையில் இப்போது புது பிளானை கையில் எடுத்திருக்கிறது ஜியோ. இந்தியாவில் இருந்து 2ஜி நொட்வொர்க்கையே முழுமையாக காலி செய்ய புது பிளான் போட்டிருக்கிறது ஜியோ. அதாவது ப்யூச்சர் போனிலேயே 4ஜி நொட்வொர்க்குடன் யுபிஐ பணப்பரிமாற்றம் வசதியையும் கொடுக்க இருக்கிறது.  

3 /6

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த போனின் விலை வெறும் ஆயிரம் ரூபாய் தானாம். இந்த போன் வந்துவிட்டால் 2ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்படுவது என்பது காணாமலேயே போய்விடும்.   

4 /6

ஜியோ பாரத் பி2 என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் இந்த ஜியோ போன், பிஐஎஸ் சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. அதனால் இந்த போன் வர இருப்பது உறுதியாகியுள்ளது.   

5 /6

புதிதாக அறிமுகமாகும் ஜியோ ப்யூச்சர் போனில் யுபிஐ கட்டணங்களை (UPI Payments) பரிவர்த்தனை செய்யலாம். ஜியோ சினிமா ஆப் (Jio Cinema) பயன்படுத்திக் கொள்ளலாம்.  

6 /6

ஜியோ பார்த் பி1 போனில் ஜியோசாவன் (JioSaavn), ஜியோபே (JioPay) மற்றும் பல தளங்களுக்கான அணுகல்களும் உள்ளன. மேலும் பேக் பேனலில் டிஜிட்டல் கேமரா, 2000எம்ஏஎச் பேட்டரி, 2.4-இன்ச் டிஸ்பிளேவும் இருக்கும்.