ஜெய்ஸ்வாலுக்கு சர்பிராஸ்கான் கொடுத்த ஐடியா..! கேட்டுக்கொண்ட சுட்டி பையன்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 199 ரன்களில் இருந்த ஜெய்ஸ்வாலுக்கு சர்பிராஸ்கான் கொடுத்த ஐடியா வொர்க் அவுட்டாகியுள்ளது.

1 /7

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்வேறு வரலாறுகளை படைத்திருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.  

2 /7

இங்கிலாந்து அணிக்கு இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இரண்டாவது தோல்வியாக அமைந்தது. இந்த மெகா வெற்றிக்கு காரணம் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ்கான் தான். ரோகித், கில், ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இளம் வீரர்களான இவர்களின் ஆட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது.  

3 /7

நீண்டகாலமாக முதல் தர கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருந்த சர்பிராஸ்கானுக்கு முதன்முறையாக ராஸ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானார். அவர் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்துடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசி அமர்களப்படுத்தினார்.   

4 /7

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சர்பிராஸ்கான், மறுமுனையில் 99 ரன்களுடன் சதத்துக்காக காத்திருந்த ஜடேஜா செய்த தவறால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.   

5 /7

இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். ஜெய்ஸ்வால் 199 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்பிராஸ்கான் அவரிடம் சென்று ஒரு ஆலோசனை கொடுத்திருக்கிறார்.  

6 /7

அதுஎன்னவென்றால், இவ்வளவு நேரம் நீ கடுமையாக உழைத்து 199 ரன்கள் எடுத்திருக்கிறாய். அதனால் ஒரு ரன் எடுக்க அவசரப்படாதே என சர்பிராஸ்கான் ஜெய்ஸ்வாலிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டுக் கொண்ட ஜெய்ஸ்வால் 200வது ரன் எடுக்க அவசரம் காட்டாமல் இருந்து அந்த மைல் கல்லை எட்டியிருக்கிறார்.  

7 /7

இருவருக்கும் இடையே முக்கியமான கட்டத்தில் நடந்த அந்த சுவாரஸ்யமான உரையாடல் இப்போது பொதுவெளிக்கு தெரிய வந்துள்ளது.