தைராய்டு என்பது கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பு என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தைராய்டு பிரச்சனை காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும், தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
தைராய்டு என்னும் நாளமில்லா சுரப்பி நமது உடலில் தட்பநிலை, இதயத் துடிப்பு, வளர்சிதை மாற்றம், உடல் வளர்ச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. தைராய்டு பிரச்சனைக்கும் உணவு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால், அதனை கட்டுப்படுத்த சாப்பாடு விஷயத்தில் தேவை. இந்நிலையில், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ராகியில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ஒரு சிறந்த சிறுதானியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இது ஒரு கோயிட்ரோஜெனிக் உணவாக இருப்பதால், தைராய்டு நோயாளிகள் அதை ஊறவைத்து நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் அதாடு, அவ்வப்போது (மாதம் 2-3 முறை மட்டுமே) சாப்பிடுவது நல்லது.
வேர்கடலை என்னும் நிலக்கடலை: வேர்க்கடலையில் கோய்ட்ரோஜன்கள் இருப்பதால், இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கோய்ட்ரோஜன்கள் கொண்ட உணவுகள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்கலாம்.
பாதாம்: பாதாமில் செலினியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் தைராய்டு செயல்பாட்டிற்கு சிறந்தவை. ஆனால் இது கோயிட்ரோஜெனிக் உள்ளதால், அதை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கும். ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் தினமும் 3-5 ஊறவைத்த பாதாம் பருப்புகளை மட்டுமே சாப்பிடலாம்.
சோயாபீன்: சோயாவில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன. இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கும்.சோயாவில் தைராய்டு சுரப்பியில் எரிச்சலை ஏற்படுத்தும் கோய்ட்ரோஜன்கள் உள்ளன. எனவே சோயா உணவுகளை தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி: தைராய்டு பிரச்சனை இருந்தால், உணவு விஷயத்தில்க் கவனமாக இருப்பதோடு தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதால் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.