குருவின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு பம்பர் லாபம்

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 12ம் தேதி தேவகரு மீன ராசிக்குள் நுழைவார். வியாழன் தனது சொந்த ராசியில் அல்லது 2, 5, 9 மற்றும் 12 வது வீட்டில் சஞ்சரிக்கும் போது பல சுப பலன்கள் கிடைக்கும். குரு பகவானின் இந்த மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1 /5

வியாழன் பெயர்ச்சி மேஷத்தின் 12 ஆம் வீட்டில் இருக்கும். அதனால், மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும். இதனுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். வியாபாரிகளின் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் யோகம் உள்ளது. இது தவிர, இந்த காலத்தில் அதிர்ஷ்டமும் அதிகமாக இருக்கும்.   

2 /5

ஏப்ரல் மாதம் வியாழன் 9வது வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு பகவானின் பெயர்ச்சி காலம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு அசையாச் சொத்திலிருந்து வலுவான பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு அமையும். இருப்பினும், தேவையற்ற பயணங்களால் ஓரளவு நிதி இழப்பு ஏற்படக்கூடும்.

3 /5

வியாழன் விருச்சிகத்தின் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க பலமான வாய்ப்புகள் உள்ளன. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  

4 /5

குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும், உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் சம்பளம் உயரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இது தவிர தந்தையின் சொத்துக்களால் ஆதாயமும் உண்டாகும்.  

5 /5

வியாழனின் இந்த ராசி மாற்றம் மீன ராசியினருக்கு சிறப்பானதாக அமையும். வியாழனின் பெயர்ச்சி 12வது வீட்டில் இருக்கும். அதன் காரணமாக நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணமும் உங்களுக்கு பல ஆதாயங்களை அளிக்கும். இதனுடன் செல்வமும் பெருகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வருமானம் கூடும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)