ரூ. 20,000க்குள் நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், ஸ்மார்ட்போன் சந்தையில் அதற்கான பல ஆப்ஷன்கள் உள்ளன. தற்போது ரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
போக்கோ எக்ஸ்3 ப்ரோ பழைய போனாக இருந்தாலும், ரூ. 20,000 விலை வரம்பில் இது இன்னும் ஒரு சிறந்த போனாக பார்க்கப்படுகின்றது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 ஆகும். Poco X3 Pro ஆனது 6.67 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 SoC, 5160mAh பேட்டரி, 48 மெகாபிக்சல் டூயல் பேக் கேமரா அமைப்பு, வேகமாக சார்ஜ் செய்யும் திறன் மற்றும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா மோட்டோ ஜி71 ரூ. 20,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,999 ஆகும். Motorola Moto G71 ஆனது 1080x2400 பிக்சல் திரை தெளிவுத்திறனுடன் 6.40 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC, விரைவான சார்ஜிங் திறன் கொண்ட 5000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் டிரிபிள் பேக் கேமரா அமைப்பு மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட Realme 8s, 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் உயர்மட்ட விவரக்குறிப்புகளை வழங்குகிறது. அடிப்படை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாடலுக்கான ஸ்மார்ட்போனின் விலை ரூ.17999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 1080x2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் 6.50 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC, 5000mAh பேட்டரி, 64 மெகாபிக்சல் டிரிபிள் பேக் கேமரா அமைப்பு மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்ட Vivo T1, தற்போது இந்தியாவில் சுமார் ரூ.20,000 விலையில் கிடைக்கும் சிறந்த போன்களில் ஒன்றாகும். விவோ தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990 ஆகும். Vivo T1 ஆனது Qualcomm Snapdragon 695 SoC, 6.58 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் டிரிபிள் பேக் கேமரா அமைப்பு மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
Redmi Note 11T 5G இந்தியாவில் தற்போது ரூ.20,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 முதல் ரூ.19,999 வரை இருக்கும். மீடியாடெக் டைமென்சிட்டி 810 5ஜி சிப்செட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்கள், 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், 50 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பு, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.