Fenugreek For Weight Loss: எடை குறைப்பு முதல் நீரிழிவு நோய் வரை வெந்தயம் பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கின்றது. வெந்தயத்தின் பன்முகத்தன்மை மற்றும் எடை இழப்பில் வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மசாலாக்கள் சமையலில் சுவையை அதிகரிப்பதுடன் இன்னும் பல வேலைகளையும் செய்கின்றன. அப்படி ஒரு மிக முக்கியமான மசாலா பொருள்தான் வெந்தயம். இது உணவு வகைகளுக்கு தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையை தருகின்றது. ஆனால் இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவை பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
மிகவும் பழமையான மருத்துவ தாவரங்களில் ஒன்றாக வெந்தயம் கருதப்படுகிறது. இதில் கணிசமான அளவு நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிட்கள், ஒலிக் அமிலம், லினோலெனிக் அமிலம், லினோலிக் அமிலம், கோலின், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, நிகோடினிக் அமிலம், நியாசின் மற்றும் பல செயல்பாட்டு கூறுகள் உள்ளன. எடை இழப்பில் வெந்தயம் எவ்வாறு பயன் அளிக்கின்றது என்பதை இங்கே காணலாம்.
வெந்தயத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். எனினும், அதை அப்படியே முழுமையாகவோ அல்லது அரைத்து பொடியாகவோ பயன்படுத்துவது மிக சிறந்ததாக இருக்கும். நமது உணவில் வெந்தயத்தை சேர்க்கும் சில முறைகளை பற்றி இங்கே காணலாம்.
அதிகாலையில் டிடாக்ஸ் தண்ணீரைக் குடிப்பது பல ஆண்டுகளாக பலர் பின்பற்றும் ஒரு நல்ல பழக்கமாக இருந்து வருகிறது. செப்புக் கிளாஸில் இரவு முழுவதும் தண்ணீரை வைத்துவிட்டு மறுநாள் காலையில் குடிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை அதே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை குடிக்கவும்.
உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க நினைப்பவர்கள் தங்கள் நாளின் துவக்கத்தில் வெந்தய டீயை உட்கொள்ளலாம். வழக்கமான தேநீருக்குப் பதிலாக இந்த மூலிகை தேநீரை குடித்து வந்தால் கூடுடலாக உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரையும். இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை பாதியாக குறைக்கவும். இந்த தேநீரை வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.
சிறிது வெந்தயத்தை உலர்த்தி, அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இதை தயிர் பச்சடி, கலந்த சாதங்கள், காய்கறிகள், சால்ட் என பல உணவுகளில் சேர்க்கலாம். இது கூடுதல் சுவைய சேர்ப்பதுடன் உடல் எடையையும் குறைக்க உதவும்.
சிற்றுண்டிகளுக்கு முளைகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள் காலையில் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இதற்கு வெந்தய விதைகளை முளைக்க வைத்து உங்கள் வழக்கமான காலை உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். முளைகட்டிய வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் நன்மை கிடைக்கிறது. இதற்கு வெந்தயத்தை கழுவி, ஈரமான துணியில் மூடி, இரண்டு அல்லது மூன்று இரவுகள் அப்படியே விடவும். பின் இவை முளைத்த பிறகு பயன்படுத்தவும்.
சரியான அளவில் உட்கொண்டால், வெந்தயம் பொதுவாக பாதுகாப்பானவையாக கருதப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், இதை அதிகமாக உட்கொள்வது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட சில பொதுவான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, எடை குறைப்புக்காக இதை உட்கொள்ளும் முன் ஒரு நிபுணரை அணுகுவது சிறந்ததாக இருக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை