எகிறிய ஜியோ யூசர் எண்ணிக்கை..! ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா சரிவு

யூசர்கள் எண்ணிக்கையில் ஜியோ மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட அதிக எண்ணிக்கை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. 

 

1 /8

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அக்டோபர் 2023-ல் 31.59 லட்சம் மொபைல் பயனர்களைச் சேர்த்தது.   

2 /8

ஜியோவின் போட்டி நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.52 லட்சம் அதிகரித்துள்ளது. TRAI -ன் மாதாந்திர வாடிக்கையாளர் தரவுகளில் இது தெரியவந்துள்ளது.  

3 /8

இதற்கிடையில், சிக்கலில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியாவுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.   

4 /8

அக்டோபரில் 20.44 லட்சம் வயர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தரவுகளின்படி, அக்டோபரில் 31.59 லட்சம் புதிய பயனர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர்.  

5 /8

அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 45.23 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 44.92 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.  

6 /8

சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அக்டோபரில் 3.52 லட்சம் அதிகரித்து. மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 37.81 கோடியை எட்டியுள்ளது.   

7 /8

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் Vodafone Idea Limited (VIL) சந்தாதாரர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக குறைந்துள்ளது.  

8 /8

 பணத் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் விஐஎல், நிதி திரட்டுவதிலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதிலும் சிக்கலை எதிர்கொள்கிறது.