தினசரி 3 கப் பிளாக் காபி குடித்தால் உடலில் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

Black Coffee Benefits: ஒரு நாளைக்கு மூன்று கப் ப்ளாக் காபி குடித்தால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயம் குறையும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

1 /6

தொடர்ந்து காபி குடிப்பவர்கள் அல்லது காஃபின் உட்கொள்பவர்களுக்கு இதயம் மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

2 /6

மிதமான அளவில் காபி குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.  

3 /6

தொடர்ந்து காபி குடித்து வருபவர்களுக்கு இதயம் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. கார்டியோமெடபாலிக் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.  

4 /6

கார்டியோமெடபாலிக் நோய்கள் என்பது இதயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகும். மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் கல்லீரலில் அதிக கொழுப்பு இருப்பது இதில் அடங்கும்.   

5 /6

ஒரு நபர் தினமும் மூன்று கப் காபி குடித்தால் அல்லது சிறிது காஃபின் எடுத்து கொண்டால், அது அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், இதயம் அல்லது சர்க்கரை பிரச்சனைகளால் நோய்வாய்ப்படாமல் இருக்கவும் உதவும்.  

6 /6

காபி, டீ அல்லது காஃபின் குடிப்பது உங்கள் இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இருப்பினும், அவை மற்ற வகையான நோய்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)