பிட்டாக மற்றும் பளபளப்பாக இருக்க ஸ்மிருதி மந்தனாவின் வொர்க்அவுட் சீக்ரெட்ஸ்!

சருமம் பளபளப்பாக இருக்க இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனா என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரரான ஸ்மிருதி மந்தனா தனது அழகு ரகசியங்களை பற்றி தெரிவித்துள்ளார்.  

2 /6

சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க உணவில் நிறைய புரோட்டீன் எடுத்து கொள்ள வேண்டும். புரோட்டீன் ஷேக்குகள், முட்டைகள் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

3 /6

வொர்க்அவுட்டைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும் நேரத்தில் லேசான வொர்க்அவுட்டும், போட்டிகள் இல்லாத நாட்களில் கடினமான வொர்க்அவுட்டை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.  

4 /6

வழக்கமான உடற்பயிற்சி செய்வது உடலை பிட்டாக வைத்திருக்க உதவுவது மட்டும் இல்லாமல், பிரகாசமாக இருக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.  

5 /6

தனது முக அழகிற்காக எந்த ஒரு தயாரிப்புகளையும் பயன்படுத்துவதில்லை என்று ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். அதிக நேரம் வெயிலில் இருப்பதால் வாஸ்லைன், சன்ஸ்கிரீன் மட்டும் பயன்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.  

6 /6

கடுமையான வெயில் மற்றும் மாசுபாட்டிலிருந்து சருமத்தை பாதுகாக்க எப்போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இந்த லோஷன் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது.