இன்சுலின் உற்பத்தியை தூண்டி... நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘சில’ உணவுகள்!

இரத்த சர்க்கரை நோய் வந்தால், வாழ்நாள் முழுவதும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதோடு, சில உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்வதால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாத போது உடல் உறுப்புகளை பாதிக்க செய்யும். அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் மருந்து, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

1 /7

உடலில் இன்சுலின் சரியாக சுரக்காத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

2 /7

தனியா அல்லது கொத்தமல்லி விதைகள், கணைய செல்களில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

3 /7

வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம், ஹைட்ராக்ஸிசோலூசின் கணைய செல்களில் இன்சுலின் தூண்டுகிறது. வெந்தயத்தில் 30 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் 20-சதவீதம் கரையாத நார்ச்சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

4 /7

இலவங்கப்பட்டை: இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் கொழுப்பை எரித்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

5 /7

பாகற்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் அருமருந்து. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டிருக்கும் பாகற்காய், கணையதில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும்.

6 /7

வெண்டைக்காய்: நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். இது இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. 

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.