ஏப்ரல் கிரக பெயர்ச்சிகள்: ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள் ஏற்பட உள்ளன. இந்த மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் பெயர்ச்சியாகும் நிலையில், புதன் உதயம் மற்றும் அஸ்தமனம், சுக்கிரன் அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளும் நடக்கும்.
ஜோதிட ரீதியாக கிரக பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள், அவர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிட்மிதமாக இருக்கும் என்பதோடு, அவர்களின் தலை எழுத்தே மாறி விடும்.
புதன் பெயர்ச்சி: ஏப்ரல் 2-ம் தேதி அதிகாலை 3.43 மணிக்கு மேஷ ராசியில் புதன் வக்ர நிலையை அடைந்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி, புதன் இரவு 7.35 மணிக்கு அஸ்தமிக்கும். பின், புதன் ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு 9.22 மணிக்கு மீனத்தில் சஞ்சரித்தார். அதே சமயம் ஏப்ரல் 19ம் தேதி மீன ராசியில் புதன் உதயமாகும்.
செவ்வாய் பெயர்ச்சி: கிரகங்களின் தளதியான செவ்வாய் 23 ஏப்ரல் 2024 அன்று காலை 08.52 மணிக்கு மீன ராசிக்குள் நுழைகிறார். நெருப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயின் பெயர்ச்சியும் மற்ற கிரகங்களை போலவே முக்கியத்துவம் வாய்ந்தது.
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பரம், செல்வ வளத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் ஏப்ரல் 25, 2024 அன்று நள்ளிரவு 12.07 மணிக்கு மேஷ ராசிக்கு மாறுகிறார். இங்கு சுக்கிரன், குரு, சூரியன் இணைவதால் திரிகிரஹி யோகம் உருவாகும். இதற்கிடையில், சுக்கிரன் ஏப்ரல் 25, 2024 அன்று காலை 05.19 மணிக்கு அஸ்தமிக்கும்.
மேஷ ராசியினருக்கு ஏப்ரல் 2024 மிகவும் சாதகமானது. செல்வச் செழிப்பும், மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் பெறுவார்கள். குடும்பத்தில் திருமண வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்பட்டு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் முன்னேற்றத்திற்கு உகந்தது. தற்போது உடல்நிலை குறித்து கவலையுடன் இருப்பவர்களின் ஆரோக்கியம் இந்த மாதம் மேம்படும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உறவுகள் வலுப்பெறும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஏப்ரலில் உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். செல்வம் பெருகவும் வாய்ப்புகள் இருக்கும். தொண்டு பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மகிழ்ச்சியையும், செழிப்பையும், புகழையும் தரப் போகிறது. தங்கள் பெற்றோரின் ஆதரவையும் பெறுவார்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உறவுகளில் இனிமை அதிகரிக்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியம் முடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.