coriander water: வரக்கொத்தமல்லி தண்ணீர் நல்லதா? இல்லை பச்சை கொத்தமல்லி நீர் நல்லதா? பட்டிமன்ற விவாதத்தில் யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும்? ஆரோக்கிய நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
கொத்தமல்லி நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, தலைவலி, நீரிழிவு மற்றும் கொழுப்பு உள்ளிட்ட 8 நோய்களைத் தடுக்கிறது.
பச்சை கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள் இரண்டும் உணவின் சுவையை அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, கொத்தமல்லி உணவின் அழகையும் சுவையையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்
பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை கொத்தமல்லி நீரில் ஏராளமாக காணப்படுகின்றன, மேலும் இந்த கூறுகள் அனைத்தும் நோய்களைத் தடுக்கின்றன. இதற்கு தினசரி வெறும் வயிற்றில் கொத்தமல்லி நீரை குடித்து வரவேண்டும்
கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனையையும் நீக்குகிறது. கொத்தமல்லி இலை நீரை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும். தினமும் கொத்தமல்லி நீரைக் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் மற்றும் பிபி கட்டுக்குள் இருக்கும் என்பதோடு, பல கடுமையான நோய்களைத் தடுக்கும்
தலைவலி பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், கண்டிப்பாக பச்சை கொத்தமல்லி இலைகளை குடித்து பாருங்கள். ஏனெனில் இந்த ஆரோக்கியமான தண்ணீரை குடிப்பதால் தலைவலி பெருமளவு குறைகிறது. இது தவிர, மன அழுத்தத்தை போக்கவும் இது பெரிதும் உதவுகிறது. இதனை உட்கொண்டால், இதுபோன்ற பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
அதிக மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு அல்லது கோபப்படுபவர்களுக்கு, கொத்தமல்லி இலை தண்ணீர் சிறந்த டானிக்காக இருக்கும். உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த இயற்கை பானத்தை குடிக்கலாம். இது ஒரு சிறந்த குளிரூட்டியாக செயல்படுகிறது.
கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், கொத்தமல்லி இலை தண்ணீரை குடிப்பது நன்மை பயக்கும். இந்த ஆரோக்கியமான பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால், கண்பார்வை மேம்படும்.
அமிலத்தன்மை, சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு, தைராய்டு தொடர்பான பிரச்சனைகள், இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவு, இரத்தப்போக்கு, வீக்கம், உடலில் நீர் பற்றாக்குறை, அல்சர், கொழுப்பு கல்லீரல், நீரிழிவு போன்ற தீவிர நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது