புடவையிலும் கிளாமர் காட்டும் யாஷிகா! வைரலாகும் புகைப்படங்கள்!

Yashika Aannand: பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

 

1 /7

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர், யாஷிகா ஆனந்த். இவருக்கு திரையுலக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது, இன்ஸ்டாகிராம் தளம்தான். இதில் மாடலாக இருந்த இவருக்கு எளிதில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 

2 /7

17 வயதில் திரையுலகிற்குள் வந்த இவர், முதன் முதலாக நடித்த படம் ஜீவா ஹீரோவாக நடித்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படம்தான். இதில், படத்தின் ஆரம்பத்திலேயே சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 

3 /7

யாஷிகாவிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு கொடுத்த படம், துருவங்கள் 16. இந்த படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. 

4 /7

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பிறகு யாஷிகாவை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாக பார்க்க தொடங்கினர். இதையடுத்து, அவருக்கு வரும் வாய்ப்புகளும் அதே போன்ற கவர்ச்சி கதாப்பாத்திரங்களாக இருந்தன. 

5 /7

யாஷிகாவிற்கு பிக்பாஸ் சீசன் இரண்டாவது சீசனில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் நன்றாகவே பிடித்துக்கொண்டார். 

6 /7

யாஷிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவை அவ்வப்போது வைரலாவதுண்டு. 

7 /7

பிங்க் நிற புடவையில் அவர் கிளாமர் காட்டி எடுத்துள்ள புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகின்றன.