பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கின்றனர். இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. இது உங்கள் ஆரோக்கியம், தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கின்றது. எனினும், நீரிழிவு நோயாளிகளும் பீட்ரூட்டை சாப்பிடலாமா? பீட்ரூட்டின் நன்மைக்காக அதை சாப்பிட்டால், அதனால் நீரிழிவு நோயாளிகள் அவதிப்பட நேரிடுமா?
சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளன. ஆகையால், பீட்ரூட் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் அதை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். பீட்ரூட்டின் சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் புரிந்துகொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். பீட்ரூட் சாப்பிடுவதால், அல்லது அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன் பீட்ரூட்டை சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால், உடலுக்கு இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.
நீரிழிவு நோய் இந்தியாவில் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இது சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது என்பதால் இது பல நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
பீட்ரூட்டில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன் பீட்ரூட்டை உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இதனால் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும்.