நீரிழிவு நோயாளியா நீங்கள்? சுகர் கட்டுப்பாட்டில் இருக்க சில ஈசி டிப்ஸ் இதோ

Diabetes Control Tips: உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நோயின் பிடியில் ஒருவர் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Diabetes Control Tips: நீரிழிவு நோய்க்கு நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையுடன் பெரிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, உடல் செயல்பாடு இல்லாதது போன்ற காரணிகள் நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன. சர்க்கரை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் செய்யக்கூடிய சில மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /7

முழு தானியங்களின் கிளைசெமிக் குறியீட்டு அளவு மிகக்குறைவு. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் தங்களது தினசரி உணவில் கண்டிப்பாக முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

2 /7

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். ஆகையால் இவற்றை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

3 /7

இலவங்கப்பட்டை இனிப்புக்கான ஏக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது பசியை குறைக்கிறது. சர்க்கரை எதிர்ப்பு பண்புகள் பல இதில் காணப்படுகின்றன. தினமும் இலவங்கப்பட்டை மூலிகை டீயை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். 

4 /7

உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, ஓடுதல் போன்றவற்றை செய்யும்போது அது குளுக்கோஸ் அளவை நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாக, சர்க்கரையின் அளவில் உடனடி ஏற்ற இறக்கம் ஏற்படாமல் இந்த அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். 

5 /7

ஆரோக்கியமான ஒருவர் 7 முதல் 8 மணி நேரம் தினமும் இரவில் தூங்க வேண்டும். தூக்கமின்மையால் கிளைசெமிக் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு கிளைசெமிக் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். ஆகையால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க, போதுமான தூக்கம் மிக அவசியமாகும்.   

6 /7

உங்கள் இரத்த சர்க்கரை அளவை எந்த வகையான உணவு பாதிக்கிறது என்பதை அறிய உங்கள் இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

7 /7

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.