சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பெற்றுள்ள நிலையில், அவரது திருமண புகைப்படத்தை மட்டும் இன்னும் இன்ஸ்டாவில் டெலிட் செய்யாமல் வைத்துள்ளார் சமந்தா.
சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
4 வருட திருமண உறவிற்கு பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அக்டோபர் 2021ல் பிரிவதாக அறிவித்தனர். சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும், பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.
தனது திருமணத்தின் போது சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.
இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார். நாக சைதன்யாவும் சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் இருந்து நீக்கி உள்ளார்.
இந்நிலையில் சமந்தா தனது திருமண புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்துள்ளார். மறந்து இன்னும் டெலிட் செய்யாமல் இருக்கிறாரா? அல்லது நினைவிற்காக வைத்திருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.