Top 7 Easy Indian Breakfast For Weight Loss : நம்மில் பலருக்கு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உதவும் ஈசியான இந்திய காலை உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Top 7 Easy Indian Breakfast For Weight Loss : பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அதற்கு எந்த உணவு ஏற்றதாக இருக்கும் என்பதே தெரியாது. குறிப்பாக காலையில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த அடிப்படை புரிதல் பலருக்கு இருக்காது. அவர்களுக்கான ஈசியான 7 இந்திய காலை உணவுகளின் பட்டியல்.
தயிருடன் பழங்கள்: இந்த காலை உணவு, உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும். இதனுடன் சூர்யகாந்தி விதைகள், சில பழங்களை சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமென்றால் சியா விதைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
முளைகட்டிய சாலட்: இந்த உணவில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதனுடன் வெள்லரிக்காய், தக்காளி, கொஞ்சமாக எலுமிச்சய் சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். சுவைக்காக காரம்-உப்பு சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
அவல்: அவலுடன் சேர்த்து, வெங்காய தாள், சிறிதளவு தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இது, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளுள் ஒன்று.
ராகி தோசை: ராகி தோசை, ஃபைபர் சத்துகள் நிறைந்த உணவுகளுள் ஒன்று. இது, செரிமானத்திற்கும் உதவுவதால் உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது.
இட்லி சாம்பார் : தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் காலை உணவுகளுள் ஒன்று, இட்லி சாமார். இட்லியை ஆவிக்கட்டி வேக வைப்பதாலும், சாம்பாருக்கு அதிக எண்ணெய் தேவைப்படாததாலும், இது டயட் காலை உணவாக பார்க்கப்படுகிறது.
மூங் தால் சில்லா: தசை வளர்ப்புக்கு உதவும் இந்த உணவு, பசியை கட்டுப்படுத்த உதவும். இதனை சமைப்பதற்கு முன்னர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
ஓட்ஸ் உப்மா: இந்த உப்மாவில், ஃபைபர் சத்துகள் அதிகமாக இருப்பதுடன், கலோரிகளும் குறைவாக இருக்கிறது. இதனால், அடிகடி பசியுணர்வு ஏற்படுவதை தடுக்கும்.