சசிகலாவுக்கு பரோல் வழங்க முடியாது: பெங்களூரு சிறை அதிரடி!

சசிகலா கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 19, 2018, 01:10 PM IST
 சசிகலாவுக்கு பரோல் வழங்க முடியாது: பெங்களூரு சிறை அதிரடி! title=

சசிகலா கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்குச் சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரின் உடல் நலம் தேறியுள்ளதாகவும் இனி எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து, தற்போது அவருக்கு மீண்டும் உடல் நலபாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடராஜனை காண சசிகலா, அதற்கான முயற்சிகளைமேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், சசிகலா கணவர் நடராஜனை காண  இன்று கோரிய பரோலை வழங்க சிறைத்துறை மறுத்துள்ளது. அண்மையில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை கூறிவிட்டதாக தெரிகிறது.

Trending News