தொடர் மழையால், பார்வையாளர்களை இழந்த ஊட்டி மலர் கண்காட்சி!

கோடை விழாக்களில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஊட்டி மலர் கண்காட்சியின் முதல் நாளில் மட்டும் பல்லாயிரம் மக்கள் கலந்துக்கொண்டனர்!

Last Updated : May 19, 2018, 12:40 PM IST
தொடர் மழையால், பார்வையாளர்களை இழந்த ஊட்டி மலர் கண்காட்சி! title=

ஊட்டி: கோடை விழாக்களில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஊட்டி மலர் கண்காட்சியின் முதல் நாளில் மட்டும் பல்லாயிரம் மக்கள் கலந்துக்கொண்டனர்!

நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழவான மலர் கண்கட்சியில் 122-வது மலர் காட்சியை, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 185 ரகங்களிலான, 45 ஆயிரம் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மேட்டூர் அணை வடிவம், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இதேப்போல் 3,500 ஆர்கிட் மலர்களான பார்பி டால், 10 ஆயிரம் கார்னேஷன் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட, 'செல்பி' ஸ்பாட். புது பூங்காவில் பல வண்ணங்களில் வைக்கப்பட்ட 25 ஆயிரம் மலர் தொட்டிகள் என அனைத்தும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டன.

அதேவேலையில் பார்வையாளர்களை கவர பூங்கா வளாகத்தினில் தனியார், அரசு துறை சார்பில் போட்டியாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

கடந்த ஒரு வாரமாக பொய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்., 21 முதல், மே, 18 வரை, தாவரவியல் பூங்காவுக்கு, 4.20 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். 
எனினும், இந்த எண்ணிக்கையானது கடந்தாண்டை காட்டிலும் ஒரு லட்சம் குறைவு என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News