நியூடெல்லி: வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையிலும், இந்திய அரசு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 27 வெளிநாட்டு இந்தியர்கள் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளைப் பெற உள்ளனர்: விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு, ஜனவரி 8 முதல் 10 வரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குவார்.
வெளிநாடுகளில் வசிக்கும் 27 இந்தியர்கள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த சாதனைகளுக்காக, பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளுக்கு (Pravasi Bharatiya Samman Awards) இந்திய அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOs) அல்லது அவர்களால் நிறுவப்பட்டு நடத்தப்படும் நிறுவனங்கள்/அமைப்புகளுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கவுரவமாக இந்த விருதுகள் பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஜனவரி 8-10 வரை நடைபெற உள்ள 17வது பிரவாசி பாரதிய நிகழ்ச்சிகளின் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகள் வழங்கி கெளரவிப்பார்.
மேலும் படிக்க | ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை
விருதாளர்களைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைவராகவும், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் துணைத் தலைவராகவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருந்தனர்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு இந்தியர்களின் பட்டியல்
ஜெகதீஷ் சென்னுபதி
நாடு: ஆஸ்திரேலியா
புலம்: அறிவியல் & தொழில்நுட்பம்/ கல்வி
சஞ்சீவ் மேத்தா
நாடு: பூட்டான்
புலம்: கல்வி
திலீப் லவுண்டோ
நாடு: பிரேசில்
புலம்: கலை & கலாச்சாரம்/கல்வி
அலெக்சாண்டர் மாலியாக்கல் ஜான்
நாடு: புருனே தருஸ்ஸலாம்
புலம்: மருத்துவம்
வைகுண்டம் ஐயர் லட்சுமணன்
நாடு: கனடா
புலம்: சமூக நலன்
மேலும் படிக்க | ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!
ஜோகிந்தர் சிங் நிஜ்ஜார்
நாடு: குரோஷியா
புலம்: கலை & கலாச்சாரம்/கல்வி
ராம்ஜி பிரசாத்
நாடு: டென்மார்க்
புலம்: தகவல் தொழில்நுட்பம்
கண்ணன் அம்பலம்
நாடு: எத்தியோப்பியா
புலம்: சமூக நலன்
அமல் குமார் முகோபாத்யாய்
நாடு: ஜெர்மனி
புலம்: சமூக நலன்/மருத்துவம்
முகமது இர்ஃபான் அலி
நாடு: கயானா
புலம்: அரசியல்/சமூக நலன்
ரீனா வினோத் புஷ்கர்ணா
நாடு: இஸ்ரேல்
புலம்: வணிகம்/சமூக நலன்
மக்சூதா சர்ஃபி ஷியோதானி
நாடு: ஜப்பான்
புலம்: கல்வி
ராஜகோபால்
நாடு: மெக்சிகோ
புலம்: கல்வி
அமித் கைலாஷ் சந்திர லத்
நாடு: போலந்து
புலம்: வணிகம்/சமூக நலன்
பர்மானந்த் சுகுமல் தஸ்வானி
நாடு: காங்கோ குடியரசு
புலம்: சமூக நலன்
பியூஷ் குப்தா
நாடு: சிங்கப்பூர்
புலம்: வணிகம்
மோகன்லால் ஹீரா
நாடு: தென்னாப்பிரிக்கா
புலம்: சமூக நலன்
சஞ்சய்குமார் சிவாபாய் படேல்
நாடு: தெற்கு சூடான்
புலம்: வணிகம்/சமூக நலன்
சிவகுமார் நடேசன்
நாடு: இலங்கை
புலம்: சமூக நலன்
தேவன்சந்திரபோஸ் ஷர்மன்
நாடு: சுரினாம்
புலம்: சமூக நலன்
அர்ச்சனா சர்மா
நாடு: சுவிட்சர்லாந்து
துறை: அறிவியல் & தொழில்நுட்பம்
பிராங்க் ஆர்தர் சீபர்சாட்
நாடு: டிரினிடாட் & டொபாகோ
புலம்: சமூக நலன்/கல்வி
சித்தார்த் பாலச்சந்திரன்
நாடு: சவுதி அரேபியா
புலம்: வணிகம்/சமூக நலன்
சந்திரகாந்த் பாபுபாய் படேல்
நாடு: இங்கிலாந்து
புலம்: ஊடகம்
தர்ஷன் சிங் தலிவால்
நாடு: அமெரிக்கா
புலம்: வணிகம்/சமூக நலன்
ராஜேஷ் சுப்ரமணியம்
நாடு: அமெரிக்கா
புலம்: வணிகம்
அசோக் குமார் திவாரி
நாடு: உஸ்பெகிஸ்தான்
புலம்: வணிகம்
மேலும் படிக்க | NRI Day: எல்லைகள் தாண்டி மொழியால் தமிழர்களை ஒன்றிணைக்கும் அயலகத் தமிழர் நாள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ