போரில் வெற்றி கிடைக்காது - பிரதமர் மோடி

ரஷ்யா - உக்ரைன் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 2, 2022, 09:53 PM IST
  • ஜெர்மனி பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி
  • மோடியின் ஐரோப்ப பயணம்
  • ஜெர்மனி சென்ற மோடி
போரில் வெற்றி கிடைக்காது - பிரதமர் மோடி title=

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.அதன்படி இன்று ஜெர்மனி சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் ஸ்கால்சை சந்தித்தார்.

அதன் பின்பு இரண்டு பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் பல தொடர்புகள், ஒற்றுமைகள் உள்ளன. உலகில் பல பொருளாதார விளைவுகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. உலகில் பல முக்கியமான மாற்றங்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றை நாம் போர் என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தப் போரில் வெற்றி முக்கியமல்ல. அனைவரும் இதில் ஈடுபடவேண்டும்.

Modi

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என கூறியிருந்தோம். இந்தப் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். உக்ரைன், ரஷ்யா மோதலால் எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது. 

அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நாம் இதை மிகவும் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இதனுடைய பாதிப்பும் தீவிரமாக இருக்கும். 

Modi

இந்தியா இந்த பொருளாதார நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மற்ற நட்பு நாடுகளுடனும் ஏற்றுமதி இறக்குமதியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியை எப்படி எட்ட வேண்டும் என்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறது” என்றார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் உற்று நோக்கப்படுவது ஏன்.. 5 காரணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

மேலும் படிக்க | இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News