ஹாங்காங் தனது புதிய விசா திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. ஃபின்டெக், தளவாடங்கள் மற்றும் வங்கித் துறைகளில் உள்ள திறம்வாய்ந்த இந்தியர்கள் ஹாங்காங்கின் புதிய விசா திட்டத்திலிருந்து பயனடைய உள்ளனர். சர்வதேச நிதி மையம் என்ற புகழ்பெற்ற நகரத்தின் அந்தஸ்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், அங்கு திறன் குறைபாடு ஏற்படவே இந்த திட்டம் துவங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நகரின் பணியாளர்கள் சுமார் 140,000 குறைந்துள்ள நிலையில், தலைமை நிர்வாகி ஜான் லீ இந்த மாதம் "டாப் டேலண்ட் பாஸ் திட்டத்தை" அறிவித்தார். இந்த திட்டத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் உயர் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கான ஊக்கத்தொகைகளும் அடங்கும்.
ஆண்டுதோறும் HK$2.5 மில்லியனுக்கும் (US$318,000) குறைவாக சம்பாதிக்கும் தனிநபர்களுக்கும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது மூன்று வருட பணி அனுபவமுள்ள உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கும் இந்தத் திட்டம் இரண்டு வருட விசாவை வழங்குகிறது.
ஹாங்காங்கில் 42,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 33,000 பேர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள் என்று ஹாங்காங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் ஜூலை 2022 புதுப்பிப்பு கூறுகிறது.
“சேவைத் தொழில், வங்கி மற்றும் நிதி, தகவல் தொழில்நுட்பம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் பணிபுரியும் இந்திய வல்லுநர்கள் அதிக அளவில் ஹாங்காங்கிற்கு வருகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்
ஹாங்காங் 2021 ஆம் ஆண்டில் அதன் பொது வேலைவாய்ப்புக் கொள்கையின் கீழ் இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட 1,034 விசா விண்ணப்பங்களுக்கும், 2022 முதல் ஆறு மாதங்களில் 560 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொற்றுநோய்க்கு முன்னர், 2019 ஆம் ஆண்டில் இதே பொது வேலைவாய்ப்புக் கொள்கையின் கீழ் 2,684 விசாக்கள் இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டன.
ஹாங்காங்கில் உள்ள இந்திய திறமைக் குழுவைப் பொருத்தவரை, அந்த நகரம் பெரும்பாலும் இந்திய அறிவாற்றலை தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது. இதன் விளைவாக, வருங்கால இந்திய தொழிலாளர்களுக்கு இது ஒரு பிரபலமான இடமாக உள்ளது.
ஹாங்காங் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய இந்திய சமூகத்தின் தாயகமாக இருந்து வருகிறது. மேலும் உலகளாவிய நிதி மற்றும் வர்த்தகத்தின் மையமாக கருதப்படும் ஹாங்காங் நகரத்திற்கு அங்கிருக்கும் இந்தியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பும் மிக அதிகமாகும்.
இந்தியாவின் ஆறு பொதுத்துறை வங்கிகளும் இரண்டு தனியார் துறை வங்கிகளும் தற்போது ஹாங்காங்கில் இயங்கி வருகின்றன.
ஹாங்காங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் செயல்படும் ஏராளமான உலகளாவிய நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி மேலாளர்கள் தங்கள் பிராந்திய தலைமையகத்தை ஹாங்காங்கில் வைத்துள்ளனர்.
இந்திய நிறுவனங்களுக்கான ஒரு முக்கிய ஆதார மையமாக இருப்பதைத் தவிர, ஹாங்காங், இந்தியாவில் இருந்து சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு இறக்குமதி செய்யும் பொருட்களின் முக்கிய மறு ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.
இந்தியர்கள் ஹாங்காங்கில் நீண்ட காலமாக இருந்து வருவதால், அவர்களால், முக்கிய ஹாங்காங் சமூகத்தில் தங்களை ஒருங்கிணைக்க முடிந்தது.
சிந்து, குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் சமூகத்தின் மிகப்பெரிய அங்கமாக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்ட இந்திய சங்கங்கள் ஹாங்காங்கில் உள்ளன. அவை புலம்பெயர்ந்தோர்/ இந்திய வம்சாவளி மக்களால் நடத்தப்படுகின்றன.
மேலும் படிக்க | 'எங்கள் நிலத்தை போலீஸ் அதிகாரியே அபகரித்துள்ளார்’: குற்றம் சாட்டும் NRI தம்பதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ