அபுதாபியில் உள்ள முசாஃபாவின் தொழில்துறை பகுதியில் புதிய நோய் தடுப்பு மற்றும் பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. விரைவான, எளிதான மற்றும் வசதியான விசா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஸ்க்ரீனிங் வசதிகளை உறுதி செய்வதற்கான யுஏஇயின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமான ப்யூரெல்த் மற்றும் அதன் துணை ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் (AHS) ஆகியவற்றின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி வந்துள்ளது.
அபுதாபி பொது சுகாதார மையத்தின் (ADPHC) இயக்குநர் ஜெனரல் மாதர் சயீத் ரஷீத் அல் நுஐமி மற்றும் ஏஎஹெஸ் -இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமர் அல் ஜாப்ரி ஆகியோர் முன்னிலையில் இந்த மையம் திறக்கப்பட்டது.
அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் சிறந்த தடுப்பு மற்றும் குணப்படுத்தும் சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு அமீரகத்தின் தலைமை உறுதிபூண்டுள்ளது என்று அல் நுஐமி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
"புதிய விசா ஸ்கிரீனிங் மையம் வாரம் முழுவதும் விரைவான மருத்துவ பரிசோதனை சேவைகளை வழங்கும். அமீரகத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பங்களிப்பதற்கும் நாங்கள் மேற்கொள்ளும் விரைவான வளர்ச்சிப் பணிகளில் இது ஒரு பாகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
ப்யூரெல்தின் தலைமை நிறுவன அதிகாரி ராஷித் அல் குபைசி, ஐக்கிய அரபு அமீரக தலைமையின் உத்தரவுகளுக்கு இணங்க, இந்த குழு சமூகத்திற்கான மிக உயர்ந்த தரத்தில் பராமரிப்பை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.
"இது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும், முக்கிய சுகாதார வசதிகளுக்கு தரமான, நம்பகமான மற்றும் வசதியான அணுகலை உறுதி செய்வதற்கும் எங்கள் பணியின் உண்மையான பிரதிநிதித்துவமாகும்."
டாக்டர் அல் ஜாப்ரி, குடிமக்களுக்கு உயர்தர சிகிச்சை, சிறப்பான மற்றும் தடுப்பு சேவைகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்வது ஆகியவற்றை சுகாதார அதிகாரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க |15 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!
"எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடிய விசா ஸ்கிரீனிங் சேவைகளை வழங்குவது முதன்மையான முன்னுரிமையாகும். எனவே நாங்கள் தொடர்ந்து எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறோம். மேலும் பல இடங்களில் எங்கள் மையங்களைத் தொடங்குகிறோம். அல் வஹ்தா மால் மற்றும் முஷ்ரிப் மால் ஆகிய இடங்களில் எங்களது இரண்டு மையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாங்கள் தஷீல் மற்றும் தவ்ஜீஹ் ஆகியோருடன் இணைந்து எங்கள் விசா ஸ்கிரீனிங் மையங்களை அவர்களின் வளாகத்திற்குள் திறக்கிறோம். இதனால் மக்கள் முழு விசா செயல்முறையையும் ஒரே கூரையின் கீழ் முடிக்க முடியும், ” என்று முசாஃபாவில் உள்ள டாப் பிரெஸ்டீஜ் சென்டருக்குள் அமைந்துள்ள புதிய வசதியைத் திறந்த பிறகு டாக்டர் அல் ஜாப்ரி கூறினார்.
ஏஎஹ்எஸ் 2006 ஆம் ஆண்டு முதல் அபுதாபியின் மிகப்பெரிய விசா ஸ்கிரீனிங் சேவை வழங்குநராக உள்ளது. அமீரகம் முழுவதும் 16 நோய் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் மையங்களின் நெட்வொர்க் உள்ளது. வழக்கமான விசா ஸ்க்ரீனிங்குக்கு கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் வேகமான டிராக் மற்றும் பிரீமியம் ஸ்கீரிங்க் சேவைகளையும் ஏஎஹ்எஸ் வழங்குகிறது. மொபைல் விசா ஸ்கிரீனிங் கிளினிக்கை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் mobilevisascreening@seha.ae -க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். Seha Visa Screening செயலி மூலம் தனிநபர்கள் அபாயிண்ட்மெண்டை பதிவு செய்யலாம்.
இந்த மையம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இதில் முன்னரே முன்பதிவு செய்தும், அல்லது வாக்-இன் முறையிலும் வாடிக்கையாளர்கள் சேவைகளை பெறலாம்.
மேலும் படிக்க |இந்திய பாஸ்போர்டின் தர வரிசை 144 இடத்திற்கு வந்தது! கவலையில் என்.ஆர்.ஐகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ