புதுடெல்லி: இந்தியாவில் பிறந்து வெளிநாட்டிலே வாழ்ந்து, சர்வதேச அளவில் நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்த அயலக இந்தியர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அதில் தமிழர்களின் பங்களிப்பும் கணிசமானது.
வானியல் இயற்பியலாளர் (astrophysicist) சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்தியாவில் பிறந்தவர். இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாக 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லாகூரில் பிறந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமனின் நெருங்கிய உறவினர் சுப்பிரமணியன் என்பது கூடுதல் தகவல்.
விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக1983ஆம் ஆண்டியில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், 1937 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
மேலும் படிக்க | ட்விட்டர வாங்கணும், விலை என்ன: கேட்ட Elon Musk
1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்ற சுப்பிரமணியன் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.
சென்னையில் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் படிப்புப்பையும், பட்டப்படிப்பையும் படித்தார். இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார்.
1930ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகையுடன், சுப்பிரமணியன் சந்திரசேகர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்ந்தார்.
இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் என பெளதீகத்தில் ஆர்வம் மிகுந்த சுப்பிரமணியன் சந்திரசேகர், வானவியலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து செய்த வரையறை ’சந்திரசேகர் வரையறை’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிங்க் லேடிக்கு ஆடம்பர வீட்டை கிம் ஜாங் உன் பரிசளித்த காரணம்
பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் மற்றும் பொருட்களின் நகர்வு மற்றும் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல் குறித்த கண்டுபிடிப்பு, வானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது என பல விஷயங்களில் முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தவர் அயலகத்தில் வாழ்ந்து சாதித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் என்பது தமிழகத்திற்கு பெருமையாகும்.
அவரது அறிவும், விடா முயற்சியும் பல உயரிய விருதுகளை பெற்றுக் கொடுத்தது. அதில் முக்கியமானது நட்சத்திர ஆராய்ச்சிக்காக 1983 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்த நோபல் பரிசு ஆகும்.
தோன்றிற் புகழோடு தோன்றுக என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி மரணமடைந்தார்.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR