இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம்: உறுதியளித்த இந்திய குழு

Sri Lanka Crisis: இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தெரிவித்து, இலங்கை சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட  குழுவினர் இந்தியா திரும்பினர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 24, 2022, 11:31 AM IST
  • இலங்கைக்கு சென்ற இந்திய குழு.
  • நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை இந்திய அரசாங்கம் வழங்கும்.
  • நெருக்கடி நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது: இலங்கை.
இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம்: உறுதியளித்த இந்திய குழு title=

இலங்கைக்கு சென்ற இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளர் வினய் குவத்ரா உள்ளிட்ட குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அதிபர் கோட்டாபாய ராஜபக்சவையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வெளியுறவு செயலாளர் வினய் குவத்ரா உள்ளிட்ட குழுவினர் நேற்று (23) காலை  இலங்கைக்கு சென்றனர். பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்ட பின் இந்த குழுவினர் இலங்கையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இந்த குழு இலங்கைக்கு சென்றது. இலங்கைக்கு மேலும் கடன் உதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த குழு இலங்கைக்கு சென்றது. 

மேலும் படிக்க | இந்தியா தந்தது தானம் இல்லை; கடன் உதவி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 

நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். 

India assures Sri Lanka Maximum Support

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள அதிபர் மாளிகையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போது வினய் குவாத்ரா இதனை கூறியுள்ளார்.

இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போதும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஷயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்த இந்திய தூதுக்குழுவினர், இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இந்த அரசும் அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

நெருக்கடி நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 இந்த உதவிகளுக்காக இலங்கை அரசு மற்றும் மக்களின் நன்றிகளை இந்திய தூதுக்குழுவிடம் அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்றிட்டங்கள் குறித்து இரு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

 நெருக்கடியான காலப்பகுதிக்கு பின்னர் மிக விரைவில் நாடு வழமை நிலையை அடையக்கூடும் என இந்திய தூதுக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்திய பொருளாதாரம் தொடர்பான செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.ஆனந்த நாகேஸ்வரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதி உயர்ஸ்தானிகர் விநோத் கே. ஜேகப், இந்து சமுத்திர பிராந்திய ஒன்றிணைப்பின் செயலாளர் கார்த்திக் பாண்டே மற்றும் அதிபர் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News