NRI News: அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் விவேக் லால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொது அணுவியல் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் லால், அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2022, 02:30 PM IST
  • டாக்டர் விவேக் லால் ஜெனரல் அடாமிக்ஸ் தலைமை நிர்வாகியாக பணிபுரிகிறார்.
  • கன்சாஸின் விச்சிட்டா மாநில பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர். விவேக் லால்.
NRI News: அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் விவேக் லால்!  title=

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜெனரல் அடாமிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் லாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார். விவேக் லால் ஒரு இந்திய-அமெரிக்க குடிமகன் ஆவார். விவேக் லால் கன்சாஸில் உள்ள விசிட்டா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் AmeriCorps அமைப்பும் இணைந்து வழங்கிய பாராட்டு பத்திரத்தில் அமெரிக்க அதிபர் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டார் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று கூறுகிறது.   AmeriCorps அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு கிளை அமைப்பு ஆகும். அமெரிக்கர்களை நெருக்கமாகக் கொண்டுவருவதன் மூலம் "சமூகங்களுக்கு சேவை செய்யும்" செயல்பாடுகளை ஊக்குவிக்க குழு விரும்புகிறது.

டாக்டர் விவேக் லால் ஒரு தொழில்துறை வல்லுநர் மற்றும் ஜெனரல்  அடாமிக்ஸ் தலைமை நிர்வாகியாக பணிபுரிகிறார். ஜெனரல்  அடாமிக்ஸ் நிறுவனம் அணுசக்தி தொழில்நுட்பத்தின் சிறப்புத் துறைகளில் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது. பிரிடேட்டர், ரீப்பர் மற்றும் கார்டியன் ட்ரோன்கள் போன்ற அதிநவீன ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) உருவாக்கியுள்ளது.  கடந்த ஆண்டு பிரதமரின் வாஷிங்டன் பயணத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைக் கொண்ட ஒரு சில நபர்களில், இந்திய தூதரக அதிகாரியின் மகனான விவேக் லாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் அட்டாமிக்ஸில் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவிக்கு முன்பு, டாக்டர் லால் NASA, Raytheon, Boeing மற்றும் Lockheed Martin போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்தார்.  அவர் பென்டகனுடன்  வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) அறிவியல் மற்றும்   தொழில்நுட்ப துறையில், அமெரிக்க தொழில்நுட்பக் குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். அவர் 2018 ஆம் ஆண்டில் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய போக்குவரத்துத் துறைக்கு தலைமை தாங்கும் அமெரிக்க அமைச்சரவை செயலாளரின் முக்கியமான ஆலோசனைக் குழுவில்  நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | வினோத் சாந்திலால் அதானி என்ற பணக்கார  'NRI'; கோடிகளில் தினசரி வருமானம்!

கன்சாஸின் விச்சிட்டா மாநில பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர். விவேக் லால் ஜெனரல் அட்டாமிக்ஸில் சேருவதற்கு முன்பு லாக்ஹீட் மார்ட்டினில் இருந்த நேரத்தைத் தவிர போயிங் மற்றும் ரிலையன்ஸில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ரிலையன்ஸ் நியூ வென்ச்சர்ஸ் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது RBI: இனி அங்கிருந்தே இதை செய்யலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News