நடராஜன் உடல் கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வெளியே வருகிறார்!

தீவிர சிகிச்சையில் இருக்கும் கணவர் நடராஜனை காண பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருகிறார்.

Last Updated : Mar 18, 2018, 01:42 PM IST
நடராஜன் உடல் கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வெளியே வருகிறார்! title=

தீவிர சிகிச்சையில் இருக்கும் கணவர் நடராஜனை காண பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருகிறார்.

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்குச் சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரின் உடல் நலம் தேறியுள்ளதாகவும் இனி எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து, தற்போது அவருக்கு மீண்டும் உடல் நலபாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடராஜனை காண சசிகலா, அதற்கான முயற்சிகளைமேற்கொண்டு வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள் கிழமை பரோல் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளிக்க உள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க ஏற்கனவே அக்டோபரில் சசிகலா பரோலில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News