தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறப்பது என்பது குறித்து நாளை மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 08:49 PM IST
  • கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு அனைத்து திரையரங்கிலும் மூடப்பட்டது
  • விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு மீண்டும் மக்கள் கூட்டம் திரையரங்குக்கு படையெடுக்க ஆரம்பித்தது.
  • தற்போது பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது?  title=

தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறப்பது என்பது குறித்து நாளை மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு அனைத்து திரையரங்கிலும் மூடப்பட்டது.  அதன்பின் பாதிப்புகள் குறைந்த உடன் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டன.  எனினும் மக்கள் திரையரங்குக்கு வர ஆர்வம் காட்டாததால் திரையரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.  பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு மீண்டும் மக்கள் கூட்டம் திரையரங்குக்கு படையெடுக்க ஆரம்பித்தது. 

அதன்பின் சுல்தான்,கர்ணன் போன்ற திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.  மீண்டும் கொரோனா இரண்டாம் நிலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

ALSO READ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து?

தற்போது பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.  மற்ற அனைத்து தொழில்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் திரையரங்கில் மட்டும் திறக்கப்படாததால் அதன் உரிமையாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.  திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாளை மருத்துவ வல்லுநர்கள் உடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது.  இந்த அறிவிப்பில் திரையரங்கள் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனினும் அண்டைய மாநிலமான கேரளத்தில் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதால் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News