ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய்!

ஷாருக்கான் நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 04:44 PM IST
ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய்!  title=

இயக்குனர் சங்கரின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அதன் பிறகு விஜயை வைத்து தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பிகில் படத்திற்கு பிறகு தற்போது பாலிவுட்டில் களமிறங்கியிருக்கிறார் அட்லி.   இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடியனாக யோகி பாபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இப்படத்தில் சாருக் கான் இரட்டைவேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ஜவான் என்று பெயர் வைத்துள்ளனர்.

srk

ஷாருக்கான் - அட்லி கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேவில் தொடங்கியுள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர்.  இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.   இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக இது தயாராகிறது.

sharukhan

இந்நிலையில் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயை நடிக்க வைக்க அட்லி விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தான் நடிக்கும் படங்களை தவிர்த்து மற்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதில்லை, இருப்பினும் தனது முந்தைய பட இயக்குனரான அட்லியின் வேண்டுகோளுக்காக ஷாருக்கான் படத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன் திரைப்பட விருது வழங்கும் விழாவில் விஜய்யை ஷாருக்கான்  புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ H.வினோத் பிறந்தநாளில் வலிமை படத்தின் புதிய அப்டேட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News