SeePics: விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிவிடும் நடிகர் சிம்பு!

செக்கச் சிவந்த வானம் திரைப்பட படபிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு உணவு ஊட்டிவிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Last Updated : May 2, 2018, 11:10 AM IST
SeePics: விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிவிடும் நடிகர் சிம்பு! title=

செக்கச் சிவந்த வானம் திரைப்பட படபிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு உணவு ஊட்டிவிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. 

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

தமிழில் செக்கச் சிவந்த வானம் என்றும், தெலுங்கில் நவாப் என்றும் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மேலும் இப்படம் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைக் களம் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தில் சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும் நடிக்கவுள்ளதாக செய்தி கசிந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியது. பின்னர் தமிழ் திரைப்பட சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில் படபிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்பட படபிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு உணவு ஊட்டிவிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News