தொடங்கிய குளிர்காலம் - சாலையோர மக்களுக்கு போர்வைகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

Vijay Makkal Iyakkam: கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சாலையோரம் உள்ள மக்களுக்கு இலவச போர்வைகளை வழங்கி உதவி செய்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Dec 25, 2023, 11:50 AM IST
  • சாலையோர மக்களுக்கு இலவச போர்வை.
  • விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி உள்ளனர்.
  • கோவை பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி உள்ளனர்.
தொடங்கிய குளிர்காலம் - சாலையோர மக்களுக்கு போர்வைகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்! title=

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.  திரைப்படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வரும் விஜய், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அண்மையில் பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கல்வி உதவி தொகை வழங்கி தமிழகத்தில் அரசியல் களத்தில் கவனம் பெற்றார். இலவச உணவு, மாணவர்களுக்கு புத்தகங்கள், மருந்தகம் என உதவிகளை செய்து வருகின்றனர்.  சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகளை செய்தனர். தற்போது கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடிகர் விஜயின் உத்தரவின் பேரில் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, ரம்ஜான், பொங்கல், கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகை கால நேரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது...' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்!

இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் குளிர்கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு தலைமையில், காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.  இதில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். தொடர்ந்து குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.  இதனை தொடர்ந்து குளிர்கால நலத்திட்ட உதவியாக கோவை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற் றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. இவர்களது இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  விஜய் மக்கள் இயக்கத்தினர்  நூலகம் துவங்கி  வருகின்றனர். மாணவ,மாணவிகளிடையே புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக துவங்கப்பட்டு வரும் இந்த  தளபதி விஜய் நூலகத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.  இந்நிலையில் கடந்த மாதம் கோவை தெற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர் பிள்ளையார் புரம் பகுதியில் விஜய் நூலகம் துவக்கியுள்ளனர்.இளைஞரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி கலந்து கொண்டு நூலகத்தை துவக்கி வைத்தார்.

இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், கதை புத்தகங்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகள் நீட் தேர்வு, நுழைவு தேர்வு, வேலை வாய்ப்புகளுக்கான தகுதி தேர்வு உள்ளிட்ட  தங்களது பல்வேறு விதமான தேர்வுகளை எதிர் கொள்வதற்கான தேவையான புத்தகங்களும் இங்கு இருப்பதாகவும், மேலும் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் புத்தகங்களை வாங்கி கொடுக்க இருப்பதாக, விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | தூத்துக்குடி வரும் நிர்மலா சீதாராமன்..! பின்னணி இதுதான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News