வித்யா பாலன் நடிப்பில் ‘சகுந்தலா தேவி’ ரிலீஸ் தேதி வெளியீடு!

அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலா தேவி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 12, 2019, 02:38 PM IST
வித்யா பாலன் நடிப்பில் ‘சகுந்தலா தேவி’ ரிலீஸ் தேதி வெளியீடு! title=

அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலா தேவி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ஹீயூமன் கம்ப்யூட்டர் என அழைக்கப்பட்ட பெண் தான் சகுந்தலா தேவி. இவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அனு மேனன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் சகுந்தலா தேவியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். சோனி பிக்சர்ஸ் மற்றும் அபுண்டான்டியா என்டர்டெயின்மென்ட் இதனை தயாரிக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில், சிவப்பு சேலையில் முதலிடத்தில் வித்யா பாலனும்,  இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை முறையே, கணினி மற்றும் கால்குலேட்டரும் அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றது. 

இந்நிலையில் தற்போது வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலா தேவி படம் மே 8, 2020ல் வெளியாக இருப்பதாக நடிகை வித்யா பாலன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

 

Trending News