ரசிகர்கள் எதிர்பார்த்த வாடிவாசல் படத்தின் அப்டேட் இதோ!

சூர்யாவின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்திற்காக நடத்தப்பட்ட டெஸ்ட் ஷூட் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 8, 2022, 11:38 AM IST
  • சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.
  • சமீபத்தில் இப்படத்தின் டெஸ்ட் சூட் நடைபெற்றது.
  • சூர்யா பிறந்தநாளில் இந்த வீடியோ வெளியாக உள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்த வாடிவாசல் படத்தின் அப்டேட் இதோ! title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபகாலமாக வெளியாகி கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பாராட்டை பெற்று வருகிறது.  இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் முதன்முறையாக சூர்யா இணைந்து பணியாற்ற இருக்கிறார்.  புகழ்பெற்ற தமிழ் நாவலில் உள்ள ஏறுதழுவலை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் அதிகம் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படமாக இப்படம் மாறிவிட்டது.

Surya

மேலும் படிக்க | காதலில் விழுந்த நடிகர் விஷால்...யார் அந்த பெண்?

சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் பணியை படக்குழு மேற்கொண்டது, அந்த தளத்தில் சூர்யா இடம்பெற்றிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.  தற்போது வெளியாகி இருக்கும் செய்திகளின்படி, இந்த மாதம் 23ம் தேதி சூர்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அந்த தினத்தில் 'வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

vadivasal

படக்குழு வெளியிடும் கிளிம்ப்ஸ் வீடியோவில் டெஸ்ட் ஷூட்டில் உள்ள உண்மையான மற்றும் பிடிஎஸ் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெள்ளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் 'வாடிவாசல்' படத்தில் ஒரு காளையும் நடிக்கவுள்ளது, தற்போது அந்த காளையை நடிகர் சூர்யா கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.  இப்படத்தை தவிர தற்போது சூர்யா இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கவுள்ளார், அதனைத்தொடர்ந்து டிஜே.ஞானவேல், சிறுத்தை சிவா, ரவிக்குமார் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரது படங்களில் நடிக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News