வீரா சீரியல்: தீக்குளிப்பு ட்ராமா போட்ட கண்மணி.. ராமசந்திரன் கொடுத்த வாக்கு!

Veera TV Serial Watch Today Episode: இன்றைய வீரா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2024, 01:25 PM IST
வீரா சீரியல்: தீக்குளிப்பு ட்ராமா போட்ட கண்மணி.. ராமசந்திரன் கொடுத்த வாக்கு! title=

Veera TV Serial In Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வள்ளிக்காக வீரா மனம் இறங்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீரா சவாரிக்கு கிளம்ப தயாராகி வெளியே வர மாறன் ஆட்டோவில் உட்கார்ந்திருக்க அவனை திட்டி கீழே இறங்க சொல்லி விட்டு ஆட்டோவை எடுத்து கொண்டு கிளம்புகிறாள். உடனே மாறன் பக்கத்துக்கு வீட்டு காரரின் பைக்கை வாங்கி கொண்டு வீராவை பின் தொடர்கிறான்.

இதை பார்த்த வீரா கொஞ்சம் நேரம் கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா என்று சத்தம் போட மாறன் அவளை பின்தொடர்வதை நிறுத்தி விடுகிறான். மறுபக்கம் கண்மணி ராகவனிடம் வீரா வாழ்க்கையை நினைத்தா பயமா இருப்பதாக பேசுகிறாள்.

திடீரென கிச்சனுக்கு ஓடி வந்து மண்ணெண்ணையை எடுத்து மேலே ஊற்றி கொண்டு நான் இந்த வீட்டிற்கு வாழவே வந்திருக்க கூடாது. மாறனால் என் தங்கச்சி வாழ்க்கையே போயிடுச்சி. அவர் உங்கா பையன் என்பதால் இந்த வீட்டை விட்டு தள்ளி வைக்கவும் முடியாது. தினம் தினம் அவர் முகத்தை பார்த்து தானே நானும் இவரும் இந்த வீட்டில் வாழனும் என்று சொல்லி ட்ராமா போடுகிறாள்.

உடனே ராமசந்திரன் ஒரு காலமும் மாறனை இந்த வீட்டிற்குள் விட மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வள்ளி அதிர்ச்சி அடைகிறாள். பிறகு ராமச்சந்திரனிடம் எதுக்கு அண்ணே அவசரப்பட்டு இப்படி வார்த்தையை விட்ட என்று கேட்க மாறன் மீது இருக்கும் கோபத்தை கொட்டுகிறார்.

அடுத்து வீரா ஆட்டோவில் வந்து கொண்டிருக்க இரண்டு ரவுடிகள் ஆட்டோவை நிறுத்தி சாந்தோம் போக வேண்டும் என்று சொல்லி ஏறுகின்றனர். வீரா ஆட்டோ ஓட்டி செல்ல இவர்கள் டபுள் மீனிங்கில் வீரா குறித்து பேசுகின்றனர், இதனால் வீரா ஆட்டோவை நிறுத்தி விட்டு வேற ஆட்டோ பார்த்துக் கொள்ள சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News