'மைக்கேல்' படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் நடிக்கும் ’மைக்கேல்’ திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார்.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2022, 05:37 PM IST
'மைக்கேல்' படத்தில் இணைந்த  நடிகை வரலட்சுமி சரத்குமார் title=

பிரம்மாண்ட ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் திரைப்படம் ’மைக்கல்’. லீட் ரோலில் சந்தீப் கிஷன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ், கரண் சி சினிமாஸ் மற்றும் எல்.எல்.பி நிறுவனங்கள் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன.

ALSO READ | 'மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள்' சூப்பர்ஸ்டாருக்கு சர்ச்சை தம்பதியின் கோரிக்கை 

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்க உள்ளார். இந்நிலையில், புதிதாக வரலட்சுமி சரத்குமாரும் மைக்கல் திரைப்படத்தில் இணைந்துள்ளார். அவருடைய கதாப்பாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன், இந்தப் படத்தில் வில்லன் ரோலில் நடிக்கிறார். 

மைக்கல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. பல மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல்கள் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் அந்த தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | Instagram ரீல்ஸை கலக்கும் 'ஓ மை மாஸ்டர்' - யூடியூபில் 2 மில்லியன் பார்வை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News