‘சூட்டிங்கில் எவன் கூட டான்ஸ் ஆடுன’ - கணவரின் கடும் சொல்லால் மனமுடைந்த சித்து!

‘எந்த நடிகருடன் நடனமாடினாய்’ என கணவர் கேட்டு திட்டியதால், சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்ததாக தகவல்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2020, 11:20 AM IST
‘சூட்டிங்கில் எவன் கூட டான்ஸ் ஆடுன’ - கணவரின் கடும் சொல்லால் மனமுடைந்த சித்து! title=

‘எந்த நடிகருடன் நடனமாடினாய்’ என கணவர் கேட்டு திட்டியதால், சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்ததாக தகவல்..!

கடந்த புதன் கிழமை சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chitra) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகை சித்ராவின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலை தான் செய்துக்கொண்டதாக காவல்ததுறை தகவல் தெரிவித்தது. மேலும், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையது தான் என்று காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையின் போது தெரிவித்தனர்.

ALSO READ | #VjChitra-வின் தற்கொலையில் புதிய திருப்பம்! கணவர் ஹேமந்த் கைது 

இதை தொடர்ந்து, நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து, ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருக்கின்றனர். கடந்த 9 ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் (Hemanath) வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஹேம்நாத். 

ALSO READ | பாண்டியன் ஸ்டோரில் இனி இவர் தான் முல்லை.. சித்துவின் இடத்தை நிரப்புவாரா?

இதனால், மனமுடைந்த சித்ரா, நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என பொருள்படும்படி ஆங்கிலத்தில் I'M SO DEPENDENT ON YOU என கூறியுள்ளார். அவரது காதலை காதிலேயே வாங்காத ஹேம்நாத், "நீ செத்துத் தொலை" என வெறுப்பாக கத்தி விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

 

 

Trending News