சசிகுமாருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள்

Last Updated : May 31, 2017, 09:22 AM IST
சசிகுமாருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் title=

சசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் ‘கொடிவீரன்’ என்றபடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார். 

இந்நிலையில் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களது தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

படத்தில் மஹிமா, பூர்ணா, சானுஷா ஆகிய மூன்று நாயகிகள் சசிகுமாருக்கு ஜோடியாக படத்தில் நடிக்கின்றனர். படத்தை ‘சசிகுமார் புரடொக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 

 

Trending News