செஸ் ஒளியம்பியாடில் சர்ச்சையான 'என்ஜாய் எஞ்சாமி'.. விளக்கம் அளித்த தெருக்குறள் அறிவு!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குறள் அறிவு இல்லாமல் மேடையில் தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியது சர்ச்சைக்குள்ளானது.  

Written by - RK Spark | Last Updated : Aug 1, 2022, 11:16 AM IST
  • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
  • இதன் தொடக்கவிழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது.
  • பாடகி தீ மட்டும் இதனை பாடியதால் சர்ச்சை ஏற்பட்டது.
செஸ் ஒளியம்பியாடில் சர்ச்சையான 'என்ஜாய் எஞ்சாமி'.. விளக்கம் அளித்த தெருக்குறள் அறிவு! title=

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் கடந்த 28ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு நடந்து வருகிறது, இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.  இந்த போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய பிரதமர், தமிழக முதல்வர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் விழா கோலாகலமாக தொடங்கியது.  இந்த தொடக்க விழாவில் பல பேரின் பேவரைட் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது.  விழா மேடையில் இந்த பாடலை தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் பாடினார், உண்மையில் இந்த பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பாடியது தீ மற்றும் தெருக்குரல் அறிவு.  ஆனால் இந்த நிகழ்ச்சியில் அறிவு பங்குபெற்று பாடாமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி சர்ச்சைக்குள்ளானது.

arivu

மேலும் படிக்க | Thalapathy67 Update: வாரிசுக்கு பிறகு விஜய் நடிக்கும் படம்! வெளியான தகவல்!

அறிவு அமெரிக்கா சென்றதால் தான் நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சில செய்திகள் வெளியானது, இந்நிலையில் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் கூறுகையில், "என்ஜாய் எஞ்சாமி பாடலை எழுதியது, பாடியது, கம்போஸ் செய்தது மற்றும் பெர்ஃபார்மன்ஸ் செய்தது என எல்லாமே செய்தது நான்தான்.  யாரும் எனக்கு இதற்கு இசையையோ, ஒரு பாடலை வரியையோ தரவில்லை.  இப்போது இந்த பாடல் பிரபலமாக இருப்பதற்கு கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் இரவு பகல் என பாராமல் கண் விழித்து தூங்காமல் உழைத்திருக்கிறேன்.  இது ஒரு நல்ல டீம் வொர்க் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை, அதேபோல இது எல்லாரையும் கவர்ந்துள்ளது.  ஆனால் இது வல்லியம்மாளின் வரலாறோ அல்லது நிலமற்ற தேயிலை தொழிலர்களாக இருந்த என் முன்னோர்களை பற்றியதோ இல்லை.  என்னுடைய ஒவ்வொரு பாடலிலும் இந்த பாடலை போலவே, இந்த தலைமுறையின் அடக்குமுறைகளை பற்றி சொல்லியிருக்கிறேன்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arivu (@therukural)

இந்த உலகில் 10000க்கும் மேற்பட்ட குத்துப்பாடல்கள் உள்ளது, அந்த பாடல்கள் அனைத்தும் நம் முன்னோர்களின் மூச்சு, வலிகள், வாழ்க்கை முறை, காதல், வாழ்க்கையில் எதிர்கொண்டது என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.  இவை எல்லாம் பாடல்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது, ஏனென்றால் நாம் ரத்தமும், வியர்வையும் கலந்த மெல்லிசைகளாக மாறிவிட்டோம்.  நமது பாரம்பரியத்தை பாடல்கள் வாயிலாக கொண்டு செல்கிறோம்.  நீங்கள் தூங்கும்பொழுது உங்களது பொக்கிஷத்தை யார் வேணாலும் பறித்து செல்லலாம், ஆனால் விழித்திருக்கும்போது முடியாது, ஜெய்பீம்.  உண்மையே இறுதியில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News