தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் விஜய், தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று, நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் எஸ்.குமரேசன் எஸ்.ஏ சந்திரசேகருக்கு பப்ளிக் நோட்டிஸ் ஒன்றை அனுப்பினர். அதில்,”சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் விஜய் பொறுப்பேற்க மாட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்,”தனது கட்சிக்காரரின் (Actor Vijay) ஒப்புதலின்றி, 2020 ஜூன் 8 ஆம் தேதியன்று ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியும், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் (S.A.Chandrasekar) பதிவு செய்திருப்பதைக் குறிப்பிட்டார்.
2020 நவம்பர் 5ஆம் தேதியன்று விஜய் (Actor Vijay) ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார். அதில், “எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் (Political Party) எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சிக்கும் நம் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” அறிவித்து விட்டார்.
Also Read | Rajnikanth: அபூர்வ ராகங்களாய் மலர்ந்த ’அண்ணாத்த’யின் அரசியல் மூன்றுமுகம்
தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், ”எஸ்ஏ சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கு விஜய் அங்கீகாரமோ ஒப்புதலோ அளிக்கவில்லை. கட்சியிலும்/ அமைப்பிலும் விஜய் பெயரையும்,புகைப்படங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தனது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் (S.A.Chandrasekar), “விஜய் பெயரில் முதலில் நான்தான் ரசிகர் மன்றம் தொடங்கினேன். எனக்கு அந்த நடிகரைப் பிடித்திருந்தது அதனால் ரசிகர் மன்றம் தொடங்கினேன். 1993ம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம் தொடங்கினேன். அப்போது நான் அவரைக் கேட்க வில்லை. அந்த நடிகரை எனக்கு பிடித்திருந்ததால், ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தேன்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை நற்பணி மன்றங்களாக மாற்றினேன். பிறகு அவற்றை மக்கள் இயக்கமாக மாற்றினேன். ஒரு தந்தையாக இருந்து இதை செய்யவில்லை. பிடித்த நடிகரின் பெயரில் நல்லது செய்ய நினைத்தேன். எதிர்வரும் தேர்தலைப் பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை. ரசிகர்களுடன் சேர்ந்து, இந்த மக்கள் இயக்கத்தின் பெயரில் 25 வருடமாக மக்களுக்கு பல நல்ல பணிகளை செய்திருக்கிறேன் ரசிகர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்திருக்கிறேன். வேறொன்றுமில்லை. அரசியல் பற்றி நான் எதுவுமே பேசுவதில்லை” என்று கூறினார்.
Also Read | கணவருக்கு எதிராக நடிகர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் அதிர்ச்சியூட்டும் அறிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR