விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை முன்னிட்டு சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் லியோ திரைப்படத்தை முன்னிட்டு சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு குடை, புடவை, தண்ணீர் குடம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஏழை எழியோர்க்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்க்கு பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க | சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்ஷனா..!
உடன் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ECR சரவணன், சென்னை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ரவி உள்ளிட்ட ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் இருந்தனர். பின்னர் மேடையில் பேசிய மாநில பொதுச் செயலாளர்: நாங்கள் செய்யக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரசிகர்களின் கையில் வைத்துள்ள பணம் மட்டுமே. எங்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் சாதாரண தொழிலாளியாகவும்,நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தளபதி அவர்கள் சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், அதற்கு அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும், அதற்கு பின்னர் தான் மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்றும், எக்காரணத்தை கொண்டும் கடன் வாங்கி செல்வு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு தலைவர் தளபதி அவர்கள் மட்டுமே.
தளபதி மீது வைத்திருக்கக்கூடிய பாசம், அன்பின் காரணமாக இதை ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். லியோ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றும்,அந்த வெற்றி விழா இது தான். தளபதி என்ற ஒரு முகத்தை காட்டினாள் போதும் இது தானா சேர்ந்த கூட்டம். தளபதி விலையில்லா விருந்தகம் 20 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது என்றும்,ஒரு ஒரு மாவட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தளபதி விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் சென்னை புறநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், தளபதி பயிலகம் சுமார் 150 இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், குறுதியகம் மூலம் சுமார் 50 பேர் தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மூலமாகவும், மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிற இயக்கம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தான்.
கண் தானம், கர்ப்பிணி பெண்களுக்கு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் சுண்டல் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குகின்ற இயக்கம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தான். சிறப்பாக செயல்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற ரசிகர்களை தளபதி அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி அவர் எழுந்து நின்று மோராக இருந்தாலும், காப்பியாக இருந்தாலும் வழங்கி சுமார் 1.30 மணி நேரம் பேசும் தலைவர் தளபதி அவர்கள் தான். சாதாரண சித்தால்கால், துப்புரவு தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களை சரிசமமாக பார்த்து அவர்களை அமர வைத்து அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து, நீங்கள் முதலில் குடும்பத்தை பார்க்க சொல்லும் ஒரே தலைவர் தளபதி அவர்கள் தான். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு என்ன தேவைகள் என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் செய்யம் என்றும்,
கொரோனா காலத்தில் நம் தளபதியின் ரசிகை ஒரு சகோதரி நாமக்கல் மாவட்டத்தில் அவர்களுடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆப்பரேஷன் செய்வதற்கு 15 யூனிட் இரத்தம் தேவை, பணம் இல்லை என்று மாவட்ட தலைவர் என்னிடத்தில் சொன்னவுடன் முதல் லாக்டவுனில் நான் சொன்ன அரை மணி நேரத்தில் 15 பேர் சென்று இரத்தம் கொடுத்த இயக்கம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தான். தளபதி பெயரில் இரத்தம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்த ஒரு குடும்பம் எங்கள் தளபதி மக்கள் இயக்கம் தான் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | சந்திரமுகி படத்தின் SPOOF-ஹா இந்த சந்திரமுகி 2? திரைவிமர்சனம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ