சிரியாவில் சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான் -விவேக்

பிஞ்சுக் குழந்தைகளின் கண்ணீரும் ரத்தமும் நெஞ்சு பிளக்கிரதே. அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா. சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான் நடிகர் விவேக் ட்வீட்

Last Updated : Feb 27, 2018, 12:39 PM IST
சிரியாவில் சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான் -விவேக் title=

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் மட்டும் இதுவரை 600-க்கு அதிகமான பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கு மேற்பட்டோர் குழந்தைகள் ஆவார்கள். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

இந்த தாக்குதலில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் இதை ரஷ்யா மற்றும் சிரியா மறுத்துள்ளது. 

தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து தமிழக நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது, பிஞ்சுக் குழந்தைகளின் கண்ணீரும் ரத்தமும் நெஞ்சு பிளக்கிரதே. அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா. சாவது குழந்தைகள் மட்டுமா? மனிதமும் தான்.

 

 

Trending News