பாலிவுட் படத்திலும் கேமியோ ரோலில் சூர்யா!

அக்ஷய் குமார் நடிக்கும் 'சூரரை போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 16, 2022, 01:25 PM IST
  • ஹிந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று.
  • சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷய் குமார்.
  • சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா.
பாலிவுட் படத்திலும் கேமியோ ரோலில் சூர்யா! title=

தமிழில் கடந்த 2020ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படம் அதிகப்படியான நேர்மறையான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  சூர்யா கரியரில் இந்த படம் சிறந்த படமாக அமைந்திருந்தது, கொரோனா தொற்று சமயம் என்பதால் படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.  இந்திய விமான போக்குவரத்து துறையில் புரட்சி செய்த ஜி.ஆர்.கோபிநாத் என்பவரை மையமாக வைத்து தான் இப்படம் உருவாக்கப்பட்டது.  விமான போக்குவரத்தில் இவர் ஏற்படுத்திய புரட்சிக்கு பின்னர் அடித்தட்டு மக்களுக்காக மலிவு விலையில் விமான போக்குவரத்து சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | கமல்ஹாசனால் கடுப்பான விஜய்சேதுபதி - சீனுராமசாமி பகிர்ந்த தகவல்

தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் படத்தை ரீமேக் செய்யவிருப்பதாக படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார்.  அதன்படி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று, அடுத்ததாக சென்னையில் சில காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது.  இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடிகர் சூர்யா 'சூரரை போற்று' ஹிந்தி ரீமேக்கில் கலந்து கொண்டார், அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.  தான் இந்த படத்தில் நடிப்பதை சூர்யாவே அவரது ட்விட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்துள்ளார்.  

 

அக்ஷய் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டதுடன், அக்ஷய் சார் நடிப்பை பார்த்து ஏங்கினேன், சுதா கொங்கரா படத்தை மீண்டும் அழகாக படத்தை கொண்டு வந்துள்ளார் என்றும், படக்குழுவுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக செலவிட்டேன் என்றும், தான் இதில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் ட்விட்டர் பதிவுக்கு நடிகர் அக்ஷய் குமார் நன்றி தெரிவிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பாலிவுட் பிரபலத்தின் படத்தில் நடிக்கிறார்.  விக்ரமில் சில நிமிடங்களே இவர் திரையில் தோன்றினாலும் பலரது நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | தளபதி 66 படத்தில் மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் இது தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News