SeePics: மகளை காக்க, உயிரை கொடுக்க முன்வந்த சன்னி லியோன்!

தன் மகளை காக்க, உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்!

Written by - Mukesh M | Last Updated : Apr 14, 2018, 08:08 PM IST
SeePics: மகளை காக்க, உயிரை கொடுக்க முன்வந்த சன்னி லியோன்! title=

தன் மகளை காக்க, உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்!

நாடுமுழுவதிலும் கத்துவா, உன்னா பகுதி பாலியல் வழக்கும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை சன்னி லியோன் தனது மகளை இத்தகு சம்பவங்களில் இருந்து உயிர் கொடுத்தேனும் காப்பாற்றுவேன் என உறுதியேற்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பள் பாலியல் வன்கொடுமை ஆளாக்கி கொலை செய்துள்ளனர். அதேப்ப்போல் உபியின் உன்னா நகரில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை பாஜக MLA பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதிலும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"இந்த உலக்கித்தில் இருக்கும் கொடியவர்களிடன் இருந்து உன்னை எந்நாளும் காப்பேன். அதற்கு விலையாக என் உயிரை கொடுக்கவேண்டும் என்றாலும் கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியானது தனது வளர்ப்பு மகள் நிஷாவிடம் தெரிவிப்பது போலும், இதனை உணர்த்துவதற்காக இந்த பதிவில் அவர் தனது மகளை பற்றிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினையும் இணைத்து பதிவிட்டுள்ளார்!

Trending News