வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Adopts a Lion: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2023, 12:26 PM IST
  • பூங்கா நிர்வாகம் தத்தெடுக்கும் திட்டம்.
  • ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
  • சிவகார்த்திகேயனின் இந்த செயல் ரசிகர்களால் இணையத்தில் வைரலானது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் title=

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும்  தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அதன் பின்னர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது. அந்தவகையில் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் இப்படி அனைவருக்கும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் சில சைலண்டான உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி ஆண் சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன். மூன்று வயது ஆகும் ஷேரு என்கிற அந்த ஆண் சிங்கத்தை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்து இருக்கிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன். இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இது போல சிவகார்த்திகேயன் புலி, யானை போன்ற விலங்குகளை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்பது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் வண்டலூரில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். இது தமிழ்நாட்டின் சென்னையின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. இந்த மிருககாட்சிச் சாலை 1855-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். இது மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 47 வகையான பாலூட்டிகள், 63 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 5 வகையான நீர்நில வாழ்வன, 28 வகையான மீன்கள் மற்றும் 10 வகையான பூச்சிகள் இருந்தன. இந்த பூங்கா, மாநிலத்தின் விலங்கினங்களின் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதுமலை தேசிய பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இதனிடையே பூங்கா நிர்வாகம் தத்தெடுக்கும் திட்டத்தை நடைமுறை அண்மையில் கூறி வருகிறது. தத்தெடுக்கும் முறையில் தத்தெடுப்பவர் அந்த விலங்கின் பராமரிப்புச் செலவுகளை அளிக்க வேண்டும். மேலும் செலவழிக்கும் தொகைக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும். சிவகார்த்திகேயனின் இந்த செயல் ரசிகர்களால் இணையத்தில் வைரலானது. இதையறிந்து பலரும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மேலும் தற்போது மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் வருகிற ஜூலை 14 ஆம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி! அண்ணா சீரியலில் சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News