கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகை என சினிமா சார்ந்த பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்ருதிஹாசன் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.
சினிமா துறையில் முதலில் ஒரு பாடகராக அறிமுகமானார் ஸ்ருதிஹாசன். தனது 6-ம் வயதபாடல கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். அதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு ஸ்ருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சுருதிஹாசன்.
ALSO READ அடுத்தடுத்து வெளியாகும் ஐந்து படங்கள்! ரசிகர்களுக்கு ஜாக்பாட்!
ஸ்ருதிஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகிறார்கள். மும்பையில் லிவ் இன் முறைப்படி வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதியும், சாந்தனுவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணிய நிலையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்டு இந்நிலையில், நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தோன்றவில்லை என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் 17 வயதில் மாடலிங் செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ஸ்ருதிஹாசன் தானா என்று கேள்வி எழுப்பும் வகையில் அடையாளமே தெரியாமல் அந்த புகைப்படத்தில் காட்சியளித்தார் ஸ்ருதிஹாசன்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR