Watch: எஸ்.பி.பி நன்றாக முன்னேறி வருகிறார், iPad-ல் கிரிக்கெட் பார்க்கிறார்: சரண்

எஸ்.பி. பாலசுப்பிரமண்யத்தின் மகன் எஸ்.பி.சரண் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், எஸ்.பி.பி-யின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 06:52 PM IST
  • எஸ்.பி.சரண் தொடர்ந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்த புதுப்பித்தல்களை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.
  • எஸ்.பி.பி.-யின் ஆரோக்கியம் சிறப்பாக முன்னேறி வருவதாக சரண் கூறினார்.
  • ஐபிஎல் துவங்கப்போவதைப் பற்றி அறிந்து எஸ்.பி.பி மிகுந்த மகிழ்ச்சி-சரண்.
Watch: எஸ்.பி.பி நன்றாக முன்னேறி வருகிறார், iPad-ல் கிரிக்கெட் பார்க்கிறார்: சரண் title=

சென்னை: புகழ்பெற்ற பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.பி.சரண் (SP Charan) தொடர்ந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்த புதுப்பித்தல்களை தனது சமூக ஊடக இடுகைகள் மூலமும், வீடியோக்கள் மூலமும் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், எஸ்.பி.பி-யின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மீண்டும் எஸ்.பி.பி.-யின் கோவிட் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளதாக சரண் தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் (SP Balasubramaniam), எழுத்து மூலம் தொடர்புகொண்டு வருவதாகவும், அவரது ஆரோக்கியம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும் சரண் கூறினார். எஸ்.பி.பி தனது ஐபாட் மூலம் செய்திகளையும் கிரிக்கெட் விளையாட்டையும் பார்த்து வருவதாகவும், ஐபிஎல் துவங்கப்போவதைப் பற்றி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் சரண் தெரிவித்தார்.

ALSO READ: மகிழ்ச்சி!! எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மருத்துவ அறிக்கை

கடந்த மாதம் SPB-யின் COVID 19 சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்ததையடுத்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அவர் தனது பேஸ்புக் அகௌண்டில் ஒரு புதுப்பிப்பை வெளியிட்டார். அதில் அவர் அவர் தனது உடல்நிலை பற்றி பேசினார். தான் COVID 19 க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப் படி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது விரைவாக குணமடைந்து வருவதாக அவரது மகன் சரண் கூறியுள்ளார். 

ALSO READ: Video! SPB உடல் நலம் பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்: மகன் சரண் கோரிக்கை

Trending News