தடைகளை தாண்டி நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்...

ஆரம்ப முதலே பல எதிர்ப்புகள் மற்றும் சிக்கல்களை சந்தித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று தடைகளை தாண்டி வெற்றிகரமாக நடைப்பெற்றது.

Last Updated : Jun 23, 2019, 07:25 PM IST
தடைகளை தாண்டி நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்... title=

ஆரம்ப முதலே பல எதிர்ப்புகள் மற்றும் சிக்கல்களை சந்தித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று தடைகளை தாண்டி வெற்றிகரமாக நடைப்பெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து சங்கத்தின் புதிய தேர்தலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் சங்கத்தின் உறுப்பினராக இருந்த 61 பேர் எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக கூறி சென்னை மாவட்ட சங்க பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சங்க பதிவாளர் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதனையடுத்து சென்னை மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டப்படி தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், இன்று ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

வாக்குப்பதிவிற்கு பின்னர் பாண்டவர் அணியின் நாசர், விஷால் கூட்டாக பேட்டி அளித்தனர், பேட்டியின் போது அவர்கள் தெரிவித்தாவது., "தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் சட்டரீதியாக நடைபெற்றுள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலில் 85% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

நடிகர் சங்க தேர்தல் மிகவும் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது. தடைகளை தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது, ஏறக்குறைய 900 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என தெரிவித்தார். மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Trending News