‘சிங்கம் 3’ படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

Last Updated : Dec 15, 2016, 02:17 PM IST
‘சிங்கம் 3’ படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!  title=

சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சிங்கம் 3 படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

சென்னை சேர்ந்த தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரிய நடிகர்கள் நடித்துள்ள படங்களை ரீலீஸ் ஆகும் போது அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். அதிக கட்டணம் வசூலிக்க தியேட்டர் உரிமையாளர்களுக்கு உரிமை கிடையாது. எனவே சூர்யா நடிப்பில் வரும் 23-ம் தேதி வெளிவர இருக்கும் சிங்கம் 3 படத்துக்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருப்பதாகவும், மேலும் சிங்கம் 3 படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். 

மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் வரும் 21-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை இந்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Trending News